Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை… வடக்குப்பட்டி ராமசாமி சர்ச்சை குறித்து சந்தானம் விளக்கம்!

vinoth
திங்கள், 29 ஜனவரி 2024 (07:32 IST)
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து முடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார் என்பதும் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவுகள் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் ரிலீஸானது. இந்த டிரைலரில் மறைந்த திராவிடர் கழக தலைவர் பெரியாரை நக்கல் செய்வது போல சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த டிரைலர் வெளியானதில் இருந்து சமூகவலைதளத்தில் பெரியாரிய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார் சந்தானம். வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் “இந்த படத்தில் ராமசாமி என்ற பெயர் எப்படி வந்ததால் நானும் இயக்குனரும் கவுண்டமணியின் தீவிர ரசிகர்கள். அதனால்தான் அவருடைய டயலாக்கை தலைப்பாக வைத்தோம். நான் சினிமாவுக்கு வந்தது மக்களை சந்தோஷப்படுத்த படுத்ததான். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. யாரையும் தாக்கிப் பேசவேண்டும் என நினைக்கவில்லை.” என விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

உறுதியானது கார்த்தி- டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி- ஷூட்டிங் எப்போது?

முதல் முறையாக யுவன் இசையில் பாடும் சந்தோஷ் நாராயணன்… ஏழு கடல் ஏழு மலை அப்டேட்!

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments