Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல ஹீரோ!

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (07:16 IST)
விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எஃப் ஐ ஆர் திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் உருவாகி மிக தாமதமாக ரிலீஸ் ஆனதால் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்துக்கு Mr.X. என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தைக் குவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இப்போது பிரபல நடிகர் சரத்குமார் ஒரு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

12 வருஷம் காத்திருப்பு.. அல்டிமேட் நகைச்சுவை கியாரண்டி! - விஷால் மகிழ்ச்சி பதிவு!

திருமணத்தை வெறுக்கும் பிரபாஸ்! அதுக்கு காரணம் இதுதான்..? - மனம் திறந்த தாயார்!

நீண்ட கால நண்பனை கரம்பிடித்த சாக்‌ஷி அகர்வால்! கோவாவில் நடந்த திருமணம்! - வைரல் போட்டோஸ்!

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments