Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Mahendran
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (16:28 IST)
நடிகர் சந்தானம் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள சந்தானம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

ஏற்கனவே ஜனவரி 26ஆம் தேதி 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு அடுத்த வாரமே சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி  வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்த அடுத்து பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

சீன் ரோல்டான் இசையில்  உருவாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்டது. இந்த படம் கடந்த 1960 ஆம் ஆண்டில் நடைபெறும் காலத்திய கதை என்றும் கூறப்படுகிறது. சந்தானம், மேகா ஆகாஷ்,  எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments