Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடம்பர கார் பரிசு... மகளின் பிறந்தநாளில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சஞ்சீவ்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (10:50 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா இருப்பதாக அறிவித்தார்.
 
இதையடுத்து ஆல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு  'ஐலா சையத்' என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது ஐலா பாப்பாவின் பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடினர். பின்னர் தற்போது மனைவி ஆல்யா மானசாவுக்கு ஆடம்பர கார் ஒன்றை பரிசளித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments