Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிகிர்தண்டா இந்தி ரீமேக்கில் சஞ்சய்தத்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (12:55 IST)
சமீபத்தில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் தண்டனை முடிந்து விடுதலையான பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய்தத், ஜிகிர்தண்டா இந்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமிமேனன், பாபிசிம்ஹா உள்பட பலர் நடித்த வெற்றிப்படம் 'ஜிகிர்தண்டா'. இந்த படத்தில் சிறப்பாக நடித்த பாபிசிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசியவிருது கிடைத்தது. பாபிசிம்ஹாவின் கேரக்டரில் ரஜினியே நடிக்க விரும்பியதாக கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. நிஷிகந்த் கமத் இயக்கவுள்ள இந்த படத்தில் சித்தார்த் கேரக்டரில் ஃபர்கான் அக்தாரும், பாபிசிம்ஹா கேரக்டரில் சஞ்சய்தத்தும் நடிக்கவுள்ளனர். லட்சுமிமேனன் கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments