தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த 'சுருளி' என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த படப்பிடிப்பிற்காக தனுஷ் முறுக்கு மீசைக்கு மாறியுள்ளதாகவும் தனுஷின் பிளாஷ்பேக் காட்சிகள் இந்த படப்பிடிப்பில் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மதுரையில் நடைபெறும் வகையில் கதை அம்சம் கொண்ட இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பிளாஷ்பேக் காட்சியில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க சஞ்சனா நடராஜன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், தீபக் பரமேஷ், வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், திரு ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது