ஜேசன் சஞ்சய்- சந்தீப் கிஷன் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

vinoth
செவ்வாய், 4 நவம்பர் 2025 (09:54 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இப்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் ஆண்டு இறுதியில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, இலங்கை மற்றும் பாங்காங்க் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் பற்றி ஒரு ஆச்சர்யத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் சுமார் 30 கோடி ரூபாயில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இது சந்தீப் கிஷனின் தெலுங்கு மார்க்கெட்டையும் கணக்கில் கொண்டு உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடிக்க சொன்னதே ப்ரவீன்தான்! கம்ரூதின் சண்டையில் ட்விஸ்ட்! லீக்கான வீடியோ! Biggboss Season 9!

ஜேசன் சஞ்சய்- சந்தீப் கிஷன் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

விஜய் சேதுபதி & மிஷ்கின் கூட்டணியின் நீண்ட நாள் தாமத ‘ட்ரெய்ன்’ ரிலீஸ் அப்டேட்!

திரிஷ்யம் மூன்றாம் பாகத்தை முதலில் பார்க்க அவர்கள்தான் தகுதியானவர்கள்… இயக்குனர் ஜீத்து ஜோசப் கருத்து!

வசூலில் மோசம். இணையத்தில் ட்ரோல்கள்.. ரவி தேஜாவின் ‘மாஸ் ஜாத்ரா’வுக்கு நேர்ந்த சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments