சண்டக்கோழி இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா இல்லையா என்பது இப்போதுவரை குழப்பமாகவே உள்ளது. சண்டக்கோழியை ஒதுக்கி வைத்து லிங்குசாமி அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போனதில் ஆரம்பித்தது குழப்பம்.
மாதக்கணக்கில் என்னை காத்திருக்க வைத்துவிட்டு, திடீரென்று அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போவதாகச் சொன்னால் எப்படி என்று விஷால் எகிற, பிரச்சனை பூதாகரமானது. பிறகு இரண்டு பேரும் சமாதானமாகி முதலில் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தை தொடங்குவது என்று முடிவானது. இருந்தும் படம் தொடங்கவில்லை.
சண்டக்கோழி இரண்டாம் பாகம் ட்ராப் என்று செய்தி பலமாக அடிபட்ட நிலையில், சண்டக்கோழி 2 விரைவில் ஆரம்பிக்கப்படும். அதையடுத்தே அல்லு அர்ஜுன் படம் என்று லிங்குசாமி ட்வீட் செய்துள்ளார்.
சீக்கிரம் படத்தை தொடங்குங்க... இல்லைன்னே வதந்தியாளர்கள் மீண்டும் படத்தை ட்ராப் பண்ணிடப்போறாங்க...