Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் விஜய் படக்குழுவோடு இனைந்த சமுத்திரக்கனி!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:07 IST)
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி, காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மாறி மாறி நடந்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் படப்பிடிப்பு வந்த நிலையில் திடிரென பழனிக்கு படக்குழு சென்றுள்ளது. அதற்கு காரணம் சமுத்திரக்கனிதானாம். அவர் தெலுங்கு படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதற்காக ராமநாதபுரத்தில் இருந்து பழனிக்கு சென்றது. இந்நிலையில் படக்குழுவினரோடு சமுத்திரக்கனி இணைந்து தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து வருகிறார். இது சம்மந்தமான புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments