Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயிலுக்கு வந்திருக்கிறேன்… இதப் போயி கேக்குறீங்க – செய்தியாளரைக் கண்டித்த சமந்தா!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (16:13 IST)
நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோயிலுக்கு வந்த போது செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விக் கனைகளால் துளைக்க ஆரம்பித்தனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு மாமியார் வீட்டிலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. 

ஆனால், அங்கு தான் பிரச்சனையே வெடித்தது. நடிப்பு சுதந்திரத்தை தாராளமாக பயன்படுத்திக்கொண்ட சமந்தா தி பேமிலி மேன் 2 தொடரில் மிகவும் மோசமான காட்சிகளில் நடித்ததால் குடும்பத்திற்குள் அவப்பெயர் உண்டாகிவிட்டதாக சமந்தாவை கணவர் கடிந்துக்கொண்டதாகவும் அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியேறியதோடு சமந்தா அக்கினேனி என்ற தனது பெயரை எஸ் என்று மட்டும் மாற்றிக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது. மேலும் அவர் கணவரை பிரிய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதுபற்றி இருவரும் இதுவரை வாய் திறந்து பேசவில்லை. இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு வந்த அவரை சூழ்ந்துகொண்ட செய்தியாளர் ஒருவர் ’உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உலாவும் வதந்தி குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ எனக் கேட்க, கடுப்பான சமந்தா ‘கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கிறேன். அறிவு இருக்கா?’ எனக் கேட்டு கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்