Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக சைதன்யா - ஷோபிதா திருமண நாளில் சமந்தா பகிர்ந்த சண்டை வீடியோ..!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (18:25 IST)
நாக சைதன்யா - ஷோபிதா திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், நடிகை சமந்தா எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சண்டை வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பெண்களைப் போல சண்டையிட வேண்டும் என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில், இன்று அவர் நடிகை ஷோபிதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிக சிறப்பாக நடைபெற்ற நிலையில், பல திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி நடிகை சமந்தா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு சிறுவனும் சிறுமியும் குத்துச்சண்டை விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிறுவனை சிறுமி தோற்கடித்து வெற்றி பெற்ற நிலையில், அந்த வீடியோவுக்கு "பெண்களைப் போல சண்டை செய்ய வேண்டும்" என்று சமந்தா கேப்சன் எழுதியுள்ளார்.

நாக சைதன்யா ஷோபிதா திருமண நாளில் சண்டை வீடியோவை சமந்தா பகிர்ந்தது, ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பா 2 படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் இதுதான்… வெளியான தகவல்!

விடுதலை 2 ஆம் பாக ரிலீஸை முன்னிட்டு முதல் பாகத்தை இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் ஓடிடி நிறுவனம்!

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவி பிரகாஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நானும் தனுஷும் நண்பர்களாகதான் இருந்தோம்… ஆனால்?- மௌனம் கலைத்த நயன்!

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: ஊடகத்திற்கு எச்சரிக்கை விடுத்த சாய் பல்லவி..!

அடுத்த கட்டுரையில்