Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாக சைதன்யாவுக்கு கொடுத்த பரிசுகள் எல்லாம் வீண்… மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய சமந்தா

Advertiesment
நாக சைதன்யாவுக்கு கொடுத்த பரிசுகள் எல்லாம் வீண்… மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய சமந்தா

vinoth

, செவ்வாய், 26 நவம்பர் 2024 (09:53 IST)
சமந்தா தற்போது, பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் மேலோட்டமான ரீமேக் என சொல்லப்படுகிறது. இந்த தொடரில் கதாநாயகனாக வருண் தவான் நடித்து வருகிறார். இது தவிர அவர் கைவசம் படங்கள் எதுவும் இப்போது இல்லை.

சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அவர்களின் விவாகரத்துக்கு சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று சமந்தா குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என்பதுதான். அதற்கு விளக்கமளிப்பது போல சமீபத்தில் பேசிய சமந்தா ‘நான் தாய் ஆவதற்கு இன்னும் தாமதம் ஆகிவிடவில்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நாக சைதன்யாவை சீண்டும் விதமாக ஒரு கருத்தை பேசியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் நடிகர் வருண் தவான் “உங்கள் வாழ்க்கையில் செய்த செலவுகளில் எது மிகவும் வீணானது என நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு சமந்தா “நான் என்னுடைய முன்னாள் காதலருக்கு அளித்த விலையுயர்ந்த பரிசுகள்தான்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்?.. வெளியான சென்சார் தகவல்!