Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் இருந்து வெளியேறிய சாய்பல்லவி!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (10:38 IST)
தெலுங்கில் ரீமேக் ஆகும் ஐய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க இருந்த சாய்பல்லவி அந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படம் இப்போது தெலுங்கில் ராணா மற்றும் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அதே போல பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேசப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து சாய்பல்லவி வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments