மாநாடு திரைப்படம் இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம் என இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் தற்போது முடிந்து திரைக்கு வர தயாராகி வருகிறது. நேற்று இந்த படத்தின் டீசரை இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் மொழிகளில் வெளியிட்டனர். சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான டெனட்டை போல காட்சிகள் ரிவர்ஸில் செல்லும் வகையில் உள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இஸ்லாமிய இளைஞனாக இதில் சிம்பு நடித்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பற்றி அவர் கூறுகையில் இன்றைய கால சூழ்நிலையில் மாநாடு மிகவும் தேவையான படம். சிம்புவுக்கு மிகவும் அழுத்தமான கமர்ஷியல் படமாக மாநாடு அமையும். இந்த படத்தை எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் நான் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.