Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீர்த்தி சுரேஷ் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இசையமைப்பாளர்

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (16:50 IST)
தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படம் ’மிஸ் இந்தியா’. தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பே முடிவடைந்து தற்போது அரசின் விதிகளை கடைபிடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்.தமன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மிஸ் இந்தியா’ படத்தின் பின்னணி இசை பணிகள் ஆரம்பம் ஆகிவிட்டதாகவும் விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று விரைவில் வெளியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் உருவாகி உள்ள இந்த படத்தை ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நரேந்திர நாத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். கீர்த்திசுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் கீர்த்தி சுரேஷ் தற்போது ‘அண்ணாத்த’ உள்பட மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments