Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மாதவன் சிறையில் அடைக்கபட்டார்...!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (13:52 IST)
இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை திரைப்படத்தில் நடிகர் மாதவன் நடித்துளார். இந்தப் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.
 
இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன். 
அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, அவர்மீது கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.  
 
இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், நம்பி நாராயணன் குற்றமற்றவர் எனவும் தெரியவந்தது. இந்த வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்த கேரளா முதல்வா் பினராயி விஜயன் அவரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.  
 
தற்போது, இவரின் கதையை 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில்படம் இயக்கியுள்ளனர் . அதை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். அதில், நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். 
 
இந்நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் டீஸர் வெளிவந்து அனைவரையும் ஈர்த்து வருகிறது. அதில் நடிகர் மாதவன் சிறையில் இருப்பது போன்ற காட்சிகளை டீஸரில் வைத்திருக்கின்றனர். 
 
அதையடுத்து, டீசர் ஆரம்பத்தில் ஒரு ராக்கெட் ஏவப்படுகிறது. பிறகு சிறையில் இருக்கும் மாதவன் இந்த வெற்றியை 20 வருடத்திற்கு முன்பே நம்மால் சாதித்திருக்க முடியும்னு நான் சொன்னேன். என் பெயர் நம்பி நாராயண், நான் ராக்கெட்ரியில் 35 வருடமும் ஜெயிலில் 50 நாட்களும் வாழ்ந்துள்ளேன். அந்த 50 நாட்களில் என் நாட்டிற்கு ஏற்பட்ட ஈடு செய்யமுடியாத இழப்பு பற்றி தான் இந்த கதை என்னை பற்றி அல்ல என்று மாதவனின் குரலுடன் இந்த டீசர் முடிவடைகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியுடன் நடிப்பது சிறந்த அனுபவம்… ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி!

ஃபஹத் பாசில் நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் இதுதான்… இயக்குனர் கொடுத்த் அப்டேட்!

21 நாட்களில் புஷ்பா 2 படைத்த வசூல் சாதனை… டங்கல் & பாகுபலி 2 வை முந்துமா?

லக்கி பாஸ்கர் இயக்குனர் வெங்கட் அட்லூரியோடு கைகோர்க்கும் சூர்யா?

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments