Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பட ஹீரோ: ஆர்மியும் தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (07:39 IST)
சிவகார்த்திகேயன் தயாரித்த படத்தின் ஹீரோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 சீசன்கள் ஏற்கனவே முடிவடைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் நான்காவது சீசன் தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், புகழ், டிக் டாக் இலக்கியா உள்பட ஒருசிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்பட ஹீரோக்களில் ஒருவரான ரியோ ராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த இவர் பல தொலை தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரியோராஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக செய்தி வெளியானது அவருக்கு டுவிட்டரில் ஆர்மியும் தொடங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் ரியோவுக்கு பெண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தைக்கு அவர் ‘ரதி’ என்று பெயரிட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே. குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ் பட ஹீரோ ஒருவர் செல்ல உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சீசனிலும் குழந்தை பிறந்த சில மாதங்களில் சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments