Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோய் மருத்துவ மனைக்காக நிதி திரட்ட இசை கச்சேரி நடத்தும் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ்!

J.Durai
திங்கள், 16 செப்டம்பர் 2024 (08:27 IST)
காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், பாண்டவர் பூமி, ரோஜாக்கூட்டம், ஜெமினி, ஆட்டோகிராப், வசூல்ராஜா MBBS,  அட்டகாசம், ஐயா, திருட்டுப் பயலே, முனி, அசல், அரண்மனை போன்ற படங்கள் உட்பட 50- க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, மறக்க முடியாத  ஹிட் பாடல்களை கொடுத்து திரைத் துறையிலும் சரி, மக்கள் மனதிலும் சரி தமக்கென தனி இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ்.
 
தற்போது சென்னையில் முதல் முறையாக இசையமைப்பாளர் பரத்வாஜின் இசைக்கச்சேரி பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது, 
 
யோகா அறக்கட்டளை மற்றும் Zest Entertainment இணைந்து சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள " விங்ஸ் வர்த்தக மையம் " செயிண்ட் ஜார்ஜ் விளையாட்டு மைதானத்தில் வருகிற அக்டோபர் மாதம் 19 ம் தேதி இந்த பிரம்மாண்டமான இசைக் கச்சேரியை நடத்த விருக்கிறார்கள்.
 
இந்த இசை நிகழ்ச்சி திருப்பூர் ரோட்டரி கிளப்,  திருப்பூர் சிட்டி முனிசிப்பல் கார்ப்பரேசன் மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து திருப்பூரில் சுமார் பல கோடி செலவில் புற்று நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறது அந்த மருத்துவமனையை முழுவதுமாக கட்டி முடிக்க பெரிய அளவில் பணத்தேவை இருப்பதால். 
மக்களிடயே அதற்கான நிதி திரட்டும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த மருத்துவமனையில் முற்றிலும் மக்களுக்கு  இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
 
17 சிறப்பம்சங்கள் கொண்டு 24 மணிநேரமும் செயல்படும்   அதிநவீன தொழில்நுட்பகள் கொண்ட மருத்துவமனையாக இதை கட்டிவருகிறார்கள்.
 
பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை  பேடிஎம் இன்சைடர் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
 
இந்த இசை கச்சேரியின் Ticket Launch  சென்னையில் நடைபெற்றது அதில் இயக்குநர் சரண், நடிகை மானு ஆகியோர் கலந்துகொண்டு டிக்கெட்டை வெளியிட்டார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments