Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயலான் ரவிகுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி… தயாரிப்பாளர் இவரா?

அயலான் ரவிகுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி… தயாரிப்பாளர் இவரா?

vinoth

, செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (15:21 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அந்த படம் கைவிடப்பட்டு சூர்யா இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் பாலிவுட்டுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் அவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இதற்கு முன்னர் அவர் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரவிகுமார் இயக்க ஒரு படத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து வந்த நிலையில் இப்போது இந்த படமும் கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது ரவிகுமார் விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை உருவாக்கி அதை அவரிடம் சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மகாராஜா படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசூலில் கலக்கும் லப்பர் பந்து… இதுவரையிலான வசூல் எவ்வளவு?