Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராட்சசன் உலக சினிமா ரசிகர்களால் செய்த சாதனை – படக்குழுவினர் மகிழ்ச்சி!

Advertiesment
ராட்சசன் உலக சினிமா ரசிகர்களால் செய்த சாதனை – படக்குழுவினர் மகிழ்ச்சி!
, திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:32 IST)
விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் உருவான ராட்சசன் திரைப்படம் ஐ எம் டி பி எனும் தளத்தில் அதிக புள்ளிகள் பெற்ற தமிழ் படமாக சாதனை படைத்துள்ளது.

ஐ எம் டி பி என்பது இண்டர்நேஷனல் மூவி டேட்டா பேஸ் எனப்படும் தளமாகும். இந்த படத்தில் ஒவ்வொரு படத்தையும் பார்த்த ரசிகர்கள் தங்கள் மதிப்பெண்களாக வழங்கி விமர்சனத்தையும் எழுதலாம். பொதுவாக வேற்று மொழி படங்களைப் பார்க்க ஆசைபடுபவர்கள் இந்த தளத்தில் அந்த படத்தின் புள்ளிகளை பார்ப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் தமிழில் இரு வருடங்களுக்கு முன்னர் வெளியான ராட்சசன் திரைப்படம் இதில் அதிக புள்ளிகள் பெற்ற தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்திய அளவிலும் பதேர் பாஞ்சாலி மற்றும் கோல்மால் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதனை வெளியிட்டு ராட்சசன் படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இந்த திரைப்படம் 19 ஹீரோக்களிடமும், சென்றதாகவும், 22 தயாரிப்பாளர்கள் சென்று அதை நிராகரித்த பின் விஷ்ணு விஷாலுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ரஜினி குறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.... இணையதளத்தில் வைரல்