Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ரபாகாவின் சர்ச்சை பேச்சு!

Advertiesment
நடிகை ரபாகாவின் சர்ச்சை பேச்சு!
, வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (16:58 IST)
ஒருவருக்கு ஆண் தன்மை இருக்கிறதா என்பதை அறிய திருமணத்திற்கு முன் உடலுறவு அவசியம் என நடிகை ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
இயக்குனர் ராமகோபால் வர்மா இயக்கத்தில் உருவான நக்னம் என்ற படத்தில் நடித்த நடிகை ரபாகா. இவர் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.  
 
இந்த நிலையில் இவர் சமீபத்தில் திருமணம் குறித்து பேசிய கருத்துதான் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது தவறல்ல என்றும் திருமணத்திற்கு பிறகு கணவன் ஆண் தன்மை இல்லை என்பது தெரிந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எனவே திருமணத்திற்கு பின் ஒருவர் ஆண் தன்மையுடன் இருக்கிறாரா என்பதை அறிய உடல் உறவு அவசியம் என்று தெரிவித்தார். 
 
மேலும் தனது தோழி இது போன்ற ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். இல்லற சுகம் கொடுக்க முடியாதவரை திருமணம் செய்து கொண்டு வருத்தப்படுவதை விட திருமணத்திற்கு முன்பே உடலுறவுக்கு சம்மதிப்பது சரிதான் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏளிய மக்களுக்கு குரல் தருபவர்கள் மிகவும் அரிது ...பிரபல நடிகரை பாராட்டிய புளூ சட்டை மாறன்