எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

vinoth
புதன், 26 நவம்பர் 2025 (12:59 IST)
தெலுங்கு மற்றும் இந்தியில் வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையானவர் ரகுல் ப்ரீத் சிங். இதையடுத்து தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.

தமிழில் சமீபத்தில் அவர் நடித்த இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனோடு அயலான் ஆகிய படங்கள் ரிலீஸாகின. ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றிப் படமாக அமையவில்லை. இப்போதைக்கு அவரின் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை. இதனால் சமீபத்தில் காதலரை கரம்பிடித்தார் ரகுல்.

இந்நிலையில் சினிமாவில் தான் சந்தித்த முதல் தோல்வி குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் நிறைய தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்து ஹிட் கொடுத்துள்ளேன். என்னுடைய முதல் தோல்வி படமே ‘ஸ்பைடர்’ படம்தான். அந்த தோல்வி என்னை பாதித்தது. நம் கனவுகள் தகர்க்கப்படும் போது அது எப்படி இருக்கும் என்பதை நான் அப்போதுதான் உணர்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன ஏன் தல மேல தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்க… அடுத்த சர்ச்சையைக் கிளப்பிய ராஜகுமாரன்!

எல் ஐ கே ரிலீஸில் இருந்த குழப்பம்… புத்திசாலித் தனமாக தப்பித்த தயாரிப்பாளர் லலித் குமார்!

கருப்பு படத் தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிய ’சூர்யா 46’ தயாரிப்பு நிறுவனம்!

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments