Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வார்த்தைன்னாலும் திருவார்த்தை சார்! – ட்ரெண்டான ரஜினியின் #இதுவும்_கடந்து_போகும்

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (16:07 IST)
தமிழ் புத்தாண்டான இன்று தமிழக மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறிய நிலையில் அதில் உள்ள ஒரு வாசகம் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.

சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வீடுகளில் இருந்தபடியே சிக்கனமாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் “இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்” என தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கடைசியாக குறிப்பிட்ட இதுவும் கடந்து போகும் என்ற வாசகம் இணையத்தில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. ரஜினியின் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி பதிவுகளை இட்டு வருகின்றனர். கொரோனா பயத்தில் மக்கள் மூழ்கியிருக்கும் சமயம் ஒரு வார்த்தை என்றாலும் நல்ல வார்த்தையாக ரஜினிகாந்த் சொல்லியிருப்பதாக அவரது ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments