Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் படத்தைப் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… வெங்கட்பிரபு நெகிழ்ச்சி!

vinoth
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (14:20 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம்  ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்றாலும் வசூலில் கலக்கியது. திரையரங்குகள் மூலமாக சுமார் 455 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் பெரியளவில் வசூலித்தாலும் படத்தின் மீது ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. அதில் முக்கியமானது படம் பல படங்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

இந்நிலையில் இப்போது படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குனர் வெங்கட்பிரபுவை அழைத்து பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வெங்கட்பிரபு “நன்றி தலைவா!! அழைத்து GOAT படத்தைப் பாராட்டியதற்கு நன்றி. மனநிறைவாக எங்களை வாழ்த்தியதற்கு மீண்டும் நன்றி. எப்போதும் உங்கள் நன்றிக்குரியவனாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 புகழ் கௌரி கிஷனின் கார்ஜியஸ் போடோ ஆல்பம்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கோட் படத்தைப் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… வெங்கட்பிரபு நெகிழ்ச்சி!

கார்த்தியின் மெய்யழகன் ஓடிடி ரிலீஸ் எப்போது?

வீர தீர சூரன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments