ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

vinoth
சனி, 25 அக்டோபர் 2025 (10:11 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இருவரும் தங்கள் கெரியர் தொடக்கத்தில் ஒன்றாக இணைந்து இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படிதான் என பல படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் பிரிந்து தனித்தனி வழியில் பயணிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் 45 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

ஆனால் அவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படம் நடிக்கவேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் தீராத ஆசையாக இருந்தது. இந்நிலையில்  ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நீண்ட காலம் கழித்து படம் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘கமலுடன் இணைந்து நடிக்க ஆசை உள்ளது. ஆனால் நல்ல கதையும் இயக்குனரும் அமையவேண்டும்’ எனக் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இந்த படத்துக்கு முன்பாக ரஜினி சுந்தர் சி இயக்கத்தில் ஒரு குறுகிய கால படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆக்‌ஷன் படமாக இல்லாமல் கலகலப்பான ஒரு சுந்தர் சி ஸ்டைலிலான படமாக அமையும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சௌந்தர்யாவுடன் மற்றொரு தயாரிப்பாளரும் இந்த படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments