Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிலர் படத்தின் ரிலீஸில் நடக்கும் மாற்றம்… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (07:55 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களோடு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.

தற்போது ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவின் மங்களூர் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் அறிமுகப்பாடல் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி அந்த முழுக்க முழுக்க ஜெயிலில் ரஜினியின் மாஸ் நடனத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடல்தான் படத்தின் முதல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன்படி, ஜெயிலர் திரைப்படம், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது செப்டம்பர் மாதமே விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் இன்னும் சில நாட்களில் படமாக்கி முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments