அமீர் அண்ணன்கிட்ட போன் பண்ணி பேசினேன்.. பட ப்ரோமோஷனில் கலந்து கொள்ளாத காரணத்தைக் கூறிய விமல்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (07:50 IST)
நடிகர் விமல் நடிக்கும் குலசாமி என்ற படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய மூன்று பொறுப்பையும் அவர் ஏற்றுள்ளார். இந்த படத்தை தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த சரவண சக்தி இயக்கியுள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இப்போது தள்ளிவைக்கப் பட்டுள்ளது.  இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அதில் படத்தின் கதாநாயகன் விமல் கலந்துகொள்ளவில்லை.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அமீர் “பொன்னியின் செல்வன் போன்ற மிகப்பிரம்மாண்டமான படங்களுக்கே, நடிகர்கள் ஊர் ஊராக சென்று ப்ரமோஷன் செய்கிறார்கள். இதுதான் இப்போது தமிழ் சினிமாவின் நிலை. ஆனால் இந்த படத்தின் ஹீரோ, இன்று ப்ரமோஷனுக்கு வரவில்லை. அவர்கள் வந்திருக்கவேண்டும் “ எனப் பேசியுள்ளார்.

இந்நிலையில் குலசாமி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு ஏன் செல்லவில்லை என்பது குறித்து விமல் விளக்கமளித்துள்ளார். அதில் “அதே நாளில் தெய்வ மச்சான் படத்தின் ப்ரஸ் மீட் இருந்தது. அந்த படக்குழுவினர் 20 நாட்களுக்கு முன்பே அதை தெரிவித்து விட்டனர். ஆனால் குலசாமி படக்குழுவினர் திடீரென ப்ரஸ் மீட் வைத்ததால் என்னால் செல்ல முடியவில்லை. இதை இயக்குனர் அமீர் அண்ணனுக்கும் நான் போன் செய்து விளக்கிவிட்டேன்.” எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments