Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின்’ அண்ணாத்த’ பட ஷூட்டிங் ...நயன்தாராவுடன் டூயட் பாடல்...

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (18:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் குஷ்பூ மீனா நயன்தாரா கீர்த்தி சுரேஷ் பிரகாஷ்ராஜ் சூரி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ’அண்ணாத்த’ படத்தில் ஜெகபதி பாபு இணைந்துள்ளார் என்று அறிவித்தது. பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த ஜகபதி பாபு ’இப்படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோரின் பாடல் காட்சிகள் சென்னையில் நடைபெற்றது. சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் இப்பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி.

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி.. தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்..!

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா-பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments