Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென ரஜினி பட இயக்குனர்கள் பட்டியலில் நுழைந்த கார்த்திக் சுப்பராஜ்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (10:27 IST)
ரஜினி அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்துக்கான கதையைக் கேட்க ஆரம்பித்துவிட்டாராம்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினி இப்போது தனது அடுத்த படத்துக்கான கதை மற்றும் இயக்குனர் ஆகியவற்றை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தேசிங்கு பெரியசாமிதான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் என சொல்லபப்ட்டது. ஆனால் இப்போது ரஜினியின் முதல் சாய்ஸில் கார்த்திக் சுப்பராஜ் இருக்கிறாராம். ஏற்கனவே பேட்ட படத்தில் அவரோடு பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘கங்குவா’ நடிகர்.. இயக்குனர் ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு..!

25 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவைத் தொடங்கிய ராம்சரணின் ‘கேம்சேஞ்சர்’ படக்குழு!

மறைந்த நகைச்சுவைக் கலைஞரின் பயோபிக்கில் நடிக்கிறாரா தனுஷ்?

விடுதலை 2 படத்தை சிறுவர்கள் பார்க்கலாமா?... சென்சார் போர்டு அளித்த சான்றிதழ்!

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து கவலை… வழக்கு நடப்பதால் சந்திக்க முடியவில்லை – அல்லு அர்ஜுன் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments