Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி, கமல், அஜித், விஜய் இணைந்தால் தமிழ்நாடு நம்பர் ஒன் ஆகும்! கூறுவது யார் தெரியுமா?

Advertiesment
, செவ்வாய், 16 மே 2017 (22:07 IST)
அதிமுகவின் இரு அணிகள் இணையுமா?, பாஜகவுடன் ரஜினி இணைவாரா? போன்ற பல இணைத்தல்கள் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் சீடர்களில் ஒருவரான அப்துல் கானி புதிய இணையும் ஐடியா ஒன்றை கூறியுள்ளார்.



'க்ரின் கலாம்' என்னும் அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் லட்சக்கணக்கான மரங்களை தமிழகம் முழுவதும் நட்டு வருபவர் இந்த அப்துல் கானி. இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இன்றைக்கு தமிழகத்தில் பெரிய நடிகர்களாக இருக்கக்கூடிய ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர்கள் ஒன்றாக இணைந்து தங்கள் ரசிகர்களிடம் ஆளுக்கொரு மரம் நட வேண்டும் என்றும் அவ்வாறு மரம் நட்டு அந்த புகைப்படத்தை தனக்கு அனுப்பினால் அவர்களுடன் இணைந்து நான் புகைப்படம் எடுத்து கொள்வேன் என்று கூறினால் போதும். ஒரே வருடத்தில் தமிழ்நாட்டில் அதிக மரங்கள் நடப்பட்டு, வளம் செழித்து தமிழ்நாடு விரைவில் நம்பர் ஒன் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய் இதை செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் நயன்தாரா