Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு கேமராவுக்கு பின் நடிக்க தெரியாது: இயக்குனர் முத்துராமன் புகழாரம்!

Webdunia
திங்கள், 15 மே 2017 (10:14 IST)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து 5 நாட்களுக்கு அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்ட ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

 
ரஜினியுடன் அவருக்கு சினிமா உலகில் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த இயக்குனர் முத்துராமனும் வந்திருந்து பேசினார். அப்போது முத்துராமன் பேசுகையில், ''ரஜினி என்றுமே கேமராவுக்கு பின்னர் என்றுமே நடித்ததில்லை. ஸ்டைலுடன் கூடிய ஸ்பீடான நடிப்பை ரசிகர்களுக்கு பிடித்த வகையில் நடிக்கக் கூடியவர் ரஜினி. 
 
ரஜினி கொடுத்துப் புகழ் பெறுபவர் ரஜினி. 5 படங்களை ரஜினியை வைத்து இயக்கி இருக்கிறேன். புகழை தலையில் வைத்துக் கொள்ளாதவர். ரஜினி கடந்து வந்த பாதையை மறக்காதவர். ரஜினியின் காலில் யாரும் விழக் கூடாது. அவரது கண்களுக்காகவே அவரை பாலசந்தர் தனது படத்தில் நடிக்க வைத்தார்.
 
தனிப்பட்ட முறையில் பல்வேறு உதவிகளை செய்பவர். ரஜினியை தொந்தரவு செய்யாமல் புகைப்படம் எடுக்க வேண்டும். ரஜினியை பின்பற்றி வாழ்வோம் என்று பேசியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

ரிலீஸுக்கு முன்பே லாபம் சம்பாதித்த ப்ரதீப்பின் ‘டிராகன்’ படம்!

என்ன லிஸ்ட் கூடிட்டே போகுது… பராசக்தி படத்தில் இணையும் பிரபல நடிகர்!

இணையத்தில் பரவி வரும் ஐஸ்வர்யா ராய் மகளின் மார்ஃபிங் வீடியோ! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எனது 60 ஆவது படத்தை நானே இயக்குவேன்… சிம்பு அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்