Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் ஐமேக்ஸ் கேமரா ஒளிப்பதிவு எத்தனை சதவீதம் தெரியுமா?

vinoth
புதன், 24 ஏப்ரல் 2024 (10:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படம் ஒரு மல்ட்டி ஸ்டார் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பல நடிகர்களின் பெயர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அடிபடுகின்றன. அந்த வகையில் இப்போது பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான டீசரில் படத்தின் தலைப்பு ‘கூலி’ என அறிவிக்கப்பட்டது.

ஜூன் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஐமேக்ஸ் கேமராவால் கிட்டத்தட்ட 70 சதவீதம் காட்சிகளை லோகேஷ் படமாக்க உள்ளாராம். படத்தின் முக்கியமான சில காட்சிகளை ஐமேக்ஸ் கேமராவில் படமாக்க உள்ளேன் என லோகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments