Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த படத்தில் தன்னுடைய வாரிசை களமிறக்கும் ஷாருக் கான்!

vinoth
புதன், 24 ஏப்ரல் 2024 (10:04 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இதையடுத்து ஷாருக் கான் ‘கிங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சுஹானா நெட்பிளிக்ஸில் வெளியான “தி ஆர்ச்சீவ்ஸ்” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் கிளாமர் ட்ரஸ் போட்டோஷூட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments