Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓகே சொன்னாலும் நெல்சனுக்கு ரஜினி போட்ட கண்டீஷன்… வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:47 IST)
ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் தற்போது எழுந்தன. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே கேட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக ரஜினி காத்திருக்கும் நிலையில் தோல்விப் படம் தந்த நெல்சனையே இயக்க சொல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் இப்போது நெல்சன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் சுயவிவரக் குறிப்பில் தான் இயக்கிய படங்களின் வரிசையில் தலைவர் 169 படத்தையும் இணைத்துள்ளார். இதனால் அவர் ரஜினி படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே தோன்றுகிறது. இந்நிலையில் நெல்சனின் இந்த மாற்றத்தை அடுத்து ரஜினிகாந்த் உடனடியாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘ரஜினிகாந்த் 169’ படத்தின் புகைப்படத்தை  இணைத்துள்ளார். இதன் மூலம் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

படத்துக்கு ரஜினி ஓகே சொல்லிவிட்டாலும், இயக்குனர் நெல்சனிடம் முழுமையான திரைக்கதை பிரதியைக் கேட்டுள்ளாராம். அதை படித்த பின்னரே ஷூட்டிங் உள்ளிட்ட விவரங்கள் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments