Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் இணையும் மற்றொரு பாலிவுட் ஹீரோ!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:43 IST)
சூரரைப் போற்று திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்கபோவது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழுக்கு இசையமைத்த ஜி வி பிரகாஷே இந்தி படத்துக்கும் இசையமைக்க உள்ளதை அறிவித்துள்ளார். கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்துக்குப் பின்னர் ஜி வி பிரகாஷ் இந்தி படத்துக்கு இசையமைக்க உள்ளார். 

இந்நிலையில் இந்த படத்தில் அக்‌ஷய் குமார் தவிர்த்து மற்றொரு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ஹ்ருத்திக் ரோஷனும் நடிக்க உள்ளாராம். ஆனால் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பதை ரகசியமாக வைத்துள்ளதாம் படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments