Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் விளையாடும் ரஜினி, நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (13:08 IST)
தர்பார் சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி, யோகி பாபு, நயன்தாரா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 


 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 


 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.


 
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட ரஜினி , யோகி பாபு , நிவேதா தாமஸ் இடப்பெற்றிருந்த ஷூட்டிங் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலானது. 


 
இந்த நிலையில் தற்போது தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி, யோகி பாபு, நயன்தாரா ஆகியோர் கிரிக்கெட் விளையாடினர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments