Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவா மனசுல சக்தி பார்ட் 2 வருமா?... இயக்குனர் ராஜேஷ் கொடுத்த அப்டேட்!

சிவா மனசுல சக்தி பார்ட் 2 வருமா?... இயக்குனர் ராஜேஷ் கொடுத்த அப்டேட்!

vinoth

, திங்கள், 7 அக்டோபர் 2024 (09:04 IST)
இயக்குனர் ராஜேஷின் முதல் படம் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவா மீண்டும் ராஜேஷின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவா மனசுல சக்தியின் வெற்றியால் அடுத்தடுத்த படங்கள் இயக்கி தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்தார் ராஜேஷ். கதையே இல்லாமல் எப்படி ஹிட் தருகிறார் என எல்லோருக்கும் ஆச்சரியம். அந்த திருஷ்டி நான்காவது படத்தில் கழிந்தது.

அடுத்தடுத்து அவர் இயக்கிய அனைத்து படங்களும் மோசமான விமர்சனங்களைப் பெற்றன. அதுபோல ஜீவாவும் மோசமான படங்களாகக் கொடுத்து மார்க்கெட் அவுட் ஆனார். அதனால் இப்போது இருவருமே ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதையடுத்து சிவா மனசுல சக்தி இரண்டாம் பாகம் எடுக்க இருவரும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. 

தற்போது ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்தை இயக்கி வரும் ராஜேஷ் இது சம்மந்தமாக பேசும்போது “சிவா மனசுல சக்தி 2 எடுக்க வாய்ப்பிருக்கு. அது சம்மந்தமாக பேசிகிட்டு இருக்கோம்” எனக் கூறியுள்ளார். பிரதர் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராஜா பட இயக்குனருக்கு BMW காரைப் பரிசாக அளித்த தயாரிப்பாளர்!