Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''நீங்களே இப்படி பண்ணலாமா?'' நடிகர் சோனு சூட்டை எச்சரித்த ரயில்வேதுறை!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (22:01 IST)
விஜயகாந்த் ஹீரோவாக நடித்த கள்ளழகர் என்ற படத்தில் வில்லனாக நடித்த சோனு சூட், பிரபல நடிகர்களின் படங்களில் டான்ஸ்ராகவும் நடித்துள்ளார்.

இவரது கேரியரில் அருந்ததி என்ற படம் பிரேக் கொடுத்தது. அனுஷ்காவுக்கு வில்லனாக அரக்கனாக நடித்த இவரது நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்தது.

அதன்பின், இந்தியி, தபாங் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்று, தற்போது, முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

 சமீபத்தில் நடிகர் சோனு சூட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். அப்போது, கதவோரத்தில் ஆபத்தான முறையில் அவர் பயணம் செய்து, அதை வீடியோவாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது வைரலான நிலையில், ரயில்வேதுறை இந்த வீடியோவை பார்த்து ஒரு டிவீட் பதிவிட்டுள்ளது.

அதில், இந்தியாவிலும் உலகிலும்  லட்சக்கணக்கான மக்களுக்கு  முன் மாதிரியாக இருக்கும் நீங்களே இப்படி பயணம் செய்தால், இளைஞருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும்! பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என்று எச்சரித்துள்ளது.

கொரொனா கால ஊரடங்கின்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வர விமான உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் பேருந்து வசதி, தொழிலாளர்களுக்கு உதவி, விவசாயிகளுக்கு டிராக்டர், மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எனத் தொடர்ந்து நடிகர் சோனு சூட் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments