Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருது!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (14:10 IST)
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், சமூக ஆர்வலர், நடன இயக்குநர் என பன்முகங்களை கொண்டவர் ராகவா லாரன்ஸ் ஒரு நடிகராக தன் நடிப்பிற்காக பெறும்  விருதுகளை விட அந்நடிகரின் சமூக சேவைகளுக்காக பெறும் விருதுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருதை வழங்கி கெளரவித்திருக்கிறது தாயன்பு ட்ரஸ்ட்.
 
சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவைசெய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி நடந்த விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் ராகவா லாரன்ஸிற்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
மக்கள் சேவைக்காக சென்ற வருடம் நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னை தெரசா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் சேவைக்காக பெறும் விருதுகள் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் பொறுப்பை அதிகப்படுத்தி இருப்பதாகவும் லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments