Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பை முடித்த ஆர் ஜே பாலாஜி… ரிலிஸ் எப்போது?

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (10:20 IST)
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தின் ரீமேக்கை ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். போனி கபூர் தயாரிக்க உள்ளார்.இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடிக்க உள்ளாராம். இதில் திருமண வயதில் மகனும் மகளும் இருக்கும் நிலையில் கர்ப்பமாகும் முதிய பெண்ணாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் நடப்பதால் அந்த வீட்டின் செட் பணிகள் இப்போது கோயம்புத்தூரில் நடந்து வந்தது. கிட்டத்தட்ட 40 நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்பு இப்போது முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் தொடங்கியுள்ளதாம். விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்