Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய சினிமாவின் உச்சம்… முதல் நாள் வசூலில் 300 கோடி ரூபாயை நெருங்கிய புஷ்பா 2

vinoth
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (19:02 IST)
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் நேற்று ரிலீஸானது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான புஷ்பா 2’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட ஏகோபித்த வரவேற்புக்குக் காரணம் இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களின் மத்தியில் புஷ்பா 2 திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 294 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இதன் மூலம் இந்திய சினிமாவில் இதுவரை எந்தவொரு படமும் செய்யாத முதல் நாள் வசூல் சாதனையை புஷ்பா 2 செய்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AGS Entertainment (@agsentertainment)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யோ யோ அழகி திஷா பதானியின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஷூட்!

சூரி நடிப்பில் இய்க்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் படத்தில் இணைந்த பிரபல கதாநாயகி!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

இந்திய சினிமாவின் உச்சம்… முதல் நாள் வசூலில் 300 கோடி ரூபாயை நெருங்கிய புஷ்பா 2

அடுத்த கட்டுரையில்
Show comments