Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனை மிரட்டிய தயாரிப்பாளர்கள்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (08:24 IST)
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பும் புகழும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சமிபத்தில் அவர் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பொறியியல் பட்டதாரியான சிவகார்த்திகேயன், விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து, பின் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். மெரினா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, அவரது நடிப்புத் திறமையால் தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களைத் தந்தார்.
 
சமீபத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த வேலைக்காரன் திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த போது, வேலைக்காரன் படத்தின் போது சந்தித்த பிரச்சனைகள் பற்றி கூறினார். சினிமா துறையில் ரெட் கார்டு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடக்கிறது. ஒருவரை வேலை செய்யவிடாமல் ஷூட்டிங்கை நிறுத்தினால் எப்படி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று வினவினார். மேலும் வேலைக்காரன் ஷூட்டிங் முதல் நாளன்று ஷூட்டிங் நடக்கவிடவில்லை. நான் கொடுத்த சில கமிட்மெண்ட்டுகள் தொடர்பாக இரவு முழுவதும் கட்ட பஞ்சாயத்து நடந்தது. அப்போது நான் கமிட்மெண்ட் கொடுக்காத இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் படம் செய்யவேண்டும் என கூறினார்கள். 
 
இருப்பினும் அந்த தயாரிப்பாளர்களின் பெயர்களை சிவகார்த்திகேயன் கூறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் GOAT படத்தை முந்தும் அஜித்தின் குட் பேட் அக்லி.. ரிலீஸில் புதிய உச்சம்!

விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு மாஸான டைட்டில்!

கல்கி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும்?.. இயக்குனர் நாக் அஸ்வின் அப்டேட்!

சூர்யாவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு… எந்த படத்தில் தெரியுமா?

விறுவிறுப்பாக நடக்கும் ‘வாடிவாசல்’ படப்பணிகள்.. ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments