சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பிரியங்கா மோகன் என்பதும் அவன் சூர்யாவுடன் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரபல நகைக்கடை விளம்பர தூதராக ஐஸ்வரியங்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
எனது பயணத்தில் பிரகாசம் சேர்க்கும் மற்றொரு பரிமாணம். பரிசுத்தம், வடிவமைப்பு, மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 94 வருட பாரம்பரிய ஜூவல்லரி பிராண்டான AVR ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ் உடன் நான் இணைந்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒவ்வொரு நகையின் நேர்த்தியும் அதன் தனித்துவமான கதைகளும் வியக்கவைக்கிறது. அவர்களது கைவினைத்திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த அற்புதமான கைவினைத்திறனுக்கும் அதற்க்கு பின்னால் இருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.