Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்மவரின் அந்த படம் என் ஆல் டைம் ஃபேவரைட்! - பிரித்விராஜ் ஓபன் டாக்!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (08:52 IST)
மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குனருமான ப்ரித்விராஜ் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் ஒரு படத்தை குறிப்பிட்டு உலக அளவில் முக்கியமான படங்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களிலும் பிரபல நடிகராக விளங்கி வருபவர் பிருத்விராஜ். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல படங்களை இயக்கியுள்ள ப்ரித்விராஜ் சமீபத்தில் இயக்கிய மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றது.

சமீபத்தில் திரைப்படங்கள் குறித்து பேசியபோது நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியான மைக்கெல் மதன காமராஜன் குறித்து பேசிய ப்ரித்விராஜ் ”ஒரு சில படங்கள்தான் உங்களை மகிழ்விக்கும். அந்த வரிசையில் மைக்கெல் மதன காமராஜன் முக்கியமான ஒன்று. இது உலக சினிமாக்களில் முக்கியமான ஒரு படம்” என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த இந்த படத்தை சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கினார். அப்போதைய காலக்கட்டதில் பெரும் வசூலை குவித்த இந்த படத்தின் 30 ஆண்டுகள் அடுத்த ஆண்டுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி படத்தின் இயக்குனர்.. சூர்யா படத்தில் நடிகர்… தமிழ் பகிர்ந்த தகவல்!

கங்குவா இரண்டாம் பாகம் வந்தால் அனைவருக்கும் பிடிக்கும்.. படத்தில் நடித்த நடிகர் கருத்து!

கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சினோ… அதுபோல கமர்ஷியல் சினிமாவுக்கு ஷங்கர்- ராம்சரண் புகழ்ச்சி!

விடுதலை 2 படத்துக்குக் கண்டனம் தெரிவித்த அர்ஜுன் சம்பத்துக்கு ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் பதில்!

இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments