Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படம்!

vinoth
திங்கள், 15 ஜூலை 2024 (07:28 IST)
மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’  நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் கதை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், 150 கோடி ரூபாய் வசூலை ஒட்டுமொத்தமாக ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் மே மாதம் 26 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த தேதியில் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் ஜூலை 19 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த திரைப்படம் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

கமல், ரஜினிக்குப் படம் பண்ணமாட்டேன்… சிவகுமாரின் கேள்விக்கு இயக்குனர் பாலா சொன்ன பதில்!

மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி: ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments