Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபர் டிரம்ப்பின் கருத்தை கலாய்த்து ட்வீட் செய்த நடிகர் சித்தார்த்

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (11:09 IST)
அமெரிக்கா-ஈரான் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்தை நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.
நடிகர் சித்தார்த், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார். ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு  பதில் அளிப்பது என அவ்வப்போது பொதுவான கருத்துக்களை பகிர்ந்தும், கிண்டல் செய்தும் வருகிறார் நடிகர் சித்தார்த். அந்த வகையில் நேற்று அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபருக்கு விடுத்த எச்சரிக்கையை குறிப்பிட்டு டொனால்ட் டிரம்ப்பை, சித்தார்த் ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.
அதில் ஈரான் அதிபர் ரவுகானிக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப், ‘அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த  வேதனையை எதிர்கொள்ள நேரிடும். வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒருபோதும்  இருக்காது. எச்சரிக்கையாக இருங்கள்’ என்று ஆங்கிலத்தில் கேப்பிட்டல் எழுத்துகளில் பதிவிட்டிருந்தார். 
 
இநிந்லையில் டிரம்ப்பின் அந்த ட்விட்டை குறிப்பிட்டு, ‘உங்களுடைய கேப்ஸ் லாக் பட்டன் ஆன் ஆகியிருக்கிறது’ என்று கிண்டல் செய்துள்ளார் நடிகர்  சித்தார்த்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

சென்னையில் நடக்கும் கேம்சேஞ்சர் பட விழாவில் கலந்துகொள்ளும் லோகேஷ் & விஜய்?

தெறி படத்தின் ரீமேக் உரிமை இத்தனைக் கோடி ரூபாயா?... ஓப்பனாக அறிவித்த தயாரிப்பாளர் தாணு!

அடுத்த கட்டுரையில்
Show comments