Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப் போகும் பிரேமலு 2 ஷூட்டிங்… ரிலீஸ் திட்டம் இதுதான்!

vinoth
திங்கள், 20 ஜனவரி 2025 (10:06 IST)
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படமான ‘பிரேமலு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பெரிய நடிகர்கள் இல்லாமல் நஸ்லின், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் சுமார் 130 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த படத்தில் நடித்திருந்த நஸ்லின் மற்றும் மமிதா பைஜு ஆகிய இருவரும் இப்போது சென்சேஷனல் நடிகர்களாகியுள்ளனர். கேரளா தாண்டியும் உள்ள மலையாள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தின் மலையாள வெர்ஷனே மிகப்பெரிய அளவில் வசூலித்தது. மறுபடி தமிழ் டப்பிங் ரிலீஸாகி அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உடனே படக்குழு அறிவித்தது. இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பே ஜூன் மாதத்தில்தான் தொடங்கும் எனவும் ரிலீஸ் கிறிஸ்துமஸ்ஸை ஒட்டி டிசம்பர் மாதத்தில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தள்ளிப் போகும் பிரேமலு 2 ஷூட்டிங்… ரிலீஸ் திட்டம் இதுதான்!

காதலியைக் கரம்பிடித்தார் ‘டிமாண்டி காலணி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து!

கங்கனாவின் ‘எமர்ஜென்ஸி’ படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் நிலவரம் என்ன?.. வெளியான தகவல்!

வெற்றிமாறன் கதையை நான் இயக்குகிறேன்… ஹீரோ இவர்தான்.. கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

நெட்பிளிக்ஸ் கொடுத்த நெருக்கடியால்தான் விடாமுயற்சி சீக்கிரமே ரிலீஸ் ஆகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments