Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தாதூன் படத்தை ரீமேக் செய்ய அந்த விஷயம்தான் காரணம்… பிரசாந்த் பகிர்ந்த தகவல்!

vinoth
வியாழன், 25 ஜூலை 2024 (08:07 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக். இந்த படம் உருவாகி சில ஆண்டுகள் ஆனபின்னும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த் இந்த படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்துள்ளார். படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் அந்தகன் ஆன்தம் என்ற பாடல் நேற்று ரிலீஸ் ஆனது. அப்போது பேசிய பிரசாந்த் “அந்தாதூன் படத்தை ரீமேக் செய்யக் காரணம் அதன் திரைக்கதைதான். இந்த படத்தை நிறைய செலவு செய்து என் அப்பா தயாரித்து இயக்கியுள்ளார். தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்களையும் செய்துள்ளார். இந்த படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது தோழி சிம்ரனுடன் இணைந்து நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments