Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

vinoth
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (08:18 IST)
சமீபகாலமாக அஜித் ரசிகர்களின் ஒரு கோஷம் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. எங்கு சென்றாலும் ரசிகர்கள் ‘கடவுளே அஜித்தே’ என கோஷம் போட்டு அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பரப்பி வந்தனர். ஒரு ஜாலியான நிகழ்வாக தொடங்கிய இது, பொருத்தமற்ற இடங்களில் எல்லாம் எழுப்பப்பட்டு ஒருவகையான அருவருப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இதைக் கண்டிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “'க..... . அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.” எனக் கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் அஜித் ரசிகர்கள் “ரேஸரே அஜித்தே” என்பது மாதிரியாக கோஷங்களை மாற்றிப் போட்டு முழங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரசன்னா தற்போது குட் பேட் அக்லி படப்பிடிப்புத் தளத்தில் அஜித் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “அழகே அஜித்தே” என டைட்டில் கொடுத்துள்ளார். இனிமே இதை ரசிகர்கள் பிடித்துக் கொண்டாலும்  பிடித்துக் கொள்வார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments