Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபையர் ஸ்டுடியோஸ் வெளியிடும் பிரபு தேவாவின்'பேட்ட ராப்'!

J.Durai
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (09:40 IST)
நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. 
 
இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார். 
 
இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பினை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. 
 
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேது படத்தை நான் திரும்ப பார்க்கவே மாட்டேன்… இயக்குனர் பாலா சொன்ன காரணம்!

பென்ஸ் படத்தின் தாமதத்தால் காஞ்சனா படத்தில் கவனம் செலுத்தும் ராகவா லாரன்ஸ்!

விடாமுயற்சி தள்ளி வைக்கப்பட்டதால் பொங்கலுக்கு வருகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்… ஆனா கைவிட மாட்டான் –பன்ச்சாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி!

ரீமேக் உரிமை தொடர்பான சிக்கலால்தான் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப் போனதா?

அடுத்த கட்டுரையில்
Show comments